கெட்டுப்போன முட்டையை கண்டுபிடிப்பது எப்படி?

நாம் பொதுவாக சந்தைகளுக்கு சென்று காய்கறிகள், பழங்கள், மற்றும் இறைச்சிகள் வாங்கினால் அதனுடைய வெளித் தோற்றம் மற்றும் வாசனைகளை வைத்து, அது கெட்டுப் போனதா இல்லையா என்று தெரிந்துக் கொள்வோம்.

ஆனால் முட்டைகள் வாங்கும் போது, அது கெட்டு போன முட்டையாக இருந்தாலும் அல்லது நல்ல முட்டையாக இருந்தாலும் அந்த முட்டையில் இருந்து எந்தவித வாசனையும் வராது.

மேலும் அந்த முட்டையின் வெளிப்புறத்தில் உள்ள ஓட்டில் எந்த வித்தியாசமும் தெரியாது.

எனவே நாம் கடைக்குச் சென்று முட்டை வாங்கும் போது அது நல்ல முட்டையா அல்லது கெட்டுப் போன முட்டையா என்பதை நாம் எப்படி தெரிந்துக் கொள்வது என்ற குழப்பம் பலபேரிடம் இருக்கும் அல்லவா?

கெட்டுப் போன முட்டையை மிகவும் எளிதாக கண்டுப்பிடிக்க சூப்பரான டிப்ஸ் இதோ.

  • ஒரு முட்டையை எடுத்து அதிகமான தண்ணீர் நிறைத்த பாத்திரத்தில் போடவும். முட்டை பாத்திரத்தின் அடி பாகத்தில் அல்லது பக்கவாட்டு பகுதியை ஒட்டி இருந்தால் அது நல்ல முட்டை. அதே சமயத்தில் அந்த முட்டை தண்ணீரில் மிதந்தவாறு காணப்பட்டால் அது கெட்டு போன முட்டை.
  • முட்டையை உடைத்து பார்க்கும் போது, அந்த முட்டையின் வெள்ளை கருவின் நிறம் தெளிவான வெள்ளை நிறமாக இருந்தால் அது நல்ல முட்டை. அதே நேரத்தில் வெள்ளைக் கருவின் நிறம் பல வேறுபாடுடன் மங்கி இருந்தால், அந்த முட்டை கெட்டுப் போனது.
  • முட்டையை நம்முடைய காதுக்கு பக்கத்தில் வைத்து ஆட்டிப்பார்த்தல், ஒரு விதமான சலசலவென்ற சத்தம் வரும் இவ்வாறு சத்தம் வந்தால், அந்த முட்டை முற்றிலுமாக கெட்டுப் போனது.
  • முட்டையை உடைத்துப் பார்க்கும் போது, மஞ்சள் கரு வட்டமாக இல்லாமல் சிதறியோ அல்லது கலங்கிய நிலையில் இருந்தால், அது கெட்டுப் போன முட்டை.