2016 நவம்பர் மாத‌ எ‌ண் ஜோ‌திட‌ பல‌ன்களும்! அதிர்ஸ்ட குறிப்புக்களும்!

1, 10, 19, 28 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களுக்கு…..

இந்த மாதத்தில் எதிர்பார்த்திருந்த தொகைக் கைக்கு வரும்.கல்வியாளர்கள், அறிஞர்களின் தொடர்பு கிடைக்கும். குடும்பத்தில் நல்லது நடக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். புது வீடு கட்டி குடிப்புகுவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாக முடியும்.

அரசியலில் செல்வாக்குக் கூடும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். நண்பர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். புதிதாக டி.வி., ஃப்ரிட்ஜ் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள்.

வீட்டை அழகுப்படுத்துவீர்கள். மாதத்தின் மையப் பகுதியிலிருந்து கணவன்-மனைவிக்குள் வரும் சின்ன சின்ன பிரச்னைகளையெல்லாம் பேசி தீர்க்கப்பாருங்கள். அவ்வப்போது மனஇறுக்கம், அசதி, சோர்வு வந்துப் போகும். அரசியல்வாதிகளே! புது பொறுப்புகள் தேடி வரும்.

கன்னிப் பெண்களே! முடிவுகள் எடுப்பதில் இருந்த தடுமாற்றம் நீங்கும். உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள்.

புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரி அலுவலக ரகசியங்களை உங்களிடம் பகிர்ந்துக் கொள்வார்.

இங்கிதமாகப் பேசி சக ஊழியர்களின் குறை, நிறைகளை சரி செய்வீர்கள். கலைத்துறையினர்களே! உங்களின் கற்பனைத் திறன் வளரும். விவேகமான முடிவுகளால் முன்னேறும் மாதமிது.

அதிஷ்ட திகதிகள்: 1, 9, 10, 12, 21
அதிஷ்ட எண்கள்: 1, 7
அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, ஊதா
அதிஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன்

2, 11, 20, 29 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களுக்கு….

இந்த மாதத்தில் உங்கள் ரசனை மாறும். வி.ஐ.பிகளிடம் எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும்.

வாகனத்தை சரி செய்வீர்கள். சிலர் வீடு மாற வேண்டுமென நினைப்பீர்கள். சகோதரங்கள் உங்கள் தேவையறிந்து உதவிகரமாக இருப்பார்கள். ஒரு சொத்தை விற்று மற்றொரு சொத்தை காப்பாற்ற வேண்டி வரும். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும்.

பழைய பிரச்னைகளுக்கு ஒரு பக்கம் தீர்வுகள் கிடைத்தாலும் புதிது புதிதாக சில பிரச்னைகளும், சிக்கல்களும் தொடர்ந்துக் கொண்டேதான் இருக்கும்.

என்றாலும் பிள்ளைகள் கோபப்படுவார்கள். நெருங்கிய உறவினர்களில் சிலர் உங்களைப் பார்த்தால் ஒரு பேச்சு, பார்க்காவிட்டால் ஒரு பேச்சு என்று இருப்பார்கள்.

வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். அரசியல்வாதிகளே! தலைமையை பற்றி சகாக்களிடம் குறை கூற வேண்டாம்.

கன்னிப் பெண்களே! வெலுத்ததெல்லாம் பாலாக நினைத்து ஏமாறாதீர்கள். புது வேலைக்கு முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள்.

உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உயரதிகாரியால் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். கலைத்துறையினர்களே!

பழைய நிறுவனங்களிலிருந்தும் வாய்ப்புகள் தேடி வரும். பேச்சை குறைத்து செயலில் வேகம் காட்ட வேண்டிய மாதமிது-.

அதிஷ்ட திகதிகள்: 2, 11, 15, 16, 20
அதிஷ்ட எண்கள்: 2, 6
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை
அதிஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்

3, 12, 21, 30 ஆகிய திகதிகளில் பிறந்த நீங்கள்…..

இந்த மாதம் எதிர்ப்புகள் அடங்கும். மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள்.அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள்.

தாய்மாமன், அத்தை வகையில் மதிப்பு, மரியாதைக் கூடும். தாய்வழி சொத்து கைக்கு வரும். மகள் உங்களைப் புரிந்துக் கொள்வாள்.

மகனுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். வேற்றுமதத்தவர்கள் அறிமுகமாவார்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். உங்கள் ரசனைக் கேற்ப வாகனம் வாங்குவீர்கள்.

சகோதரங்கள் உங்கள் வளர்ச்சிக்கு பக்கபலமாக இருப்பார்கள். பழைய கடனில் ஒருபகுதியை தீர்க்க வழி பிறக்கும். யாரை நம்புவது, நம்பாமல் இருப்பது போன்ற குழப்பங்கள் வரும்.

புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். அரசியல்வாதிகளே! எதிர்கட்சிக்காரர்கள் உதவுவார்கள்.கன்னிப் பெண்களே! காதல் இனிக்கும். எதிர்பார்த்தைப் போல் நல்ல வரன் அமையும்.

வியாபாரம் செழிக்கும். போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள்.

கலைத்துறையினர்களே! உங்கள் திறமையை வளர்த்துக் கொள்ளும் முயற்சியில் இறங்குவீர்கள். வெற்றிப் பாதையில் பயணிக்கும் மாதமிது.

அதிஷ்ட திகதிகள்: 3, 1, 9, 10, 27
அதிஷ்ட எண்கள்: 3, 9
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மஞ்சள்
அதிஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி

4, 13, 22, 31 ஆகிய திகதிகளில் பிறந்த நீங்கள்…..

இந்த மாததத்தில் எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.ஷேர் மூலமும் பணம் வரும். குழந்தை பாக்யம் கிடைக்கும்.

ஆன்மிகப் பெரியோர், சித்தர்களை சந்தித்து ஆசி பெறுவீர்கள். கோவில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள்.

அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். வழக்கில் திருப்பம் ஏற்படும். பழைய நகையை மாற்றி புது டிசைனில் வாங்குவீர்கள்.

பூர்வீக சொத்தில் சீர்திருத்தம் செய்வீர்கள். உறவினர்களால் ஆதாயம் கிடைப்பதுடன் கௌரவமும் ஒருபடி உயரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள்.

மாதத்தின் முற்பகுதியில் பிள்ளைகளின் நட்பு வட்டத்தை கண்காணிப்பது நல்லது. கர்ப்பிணிப் பெண்கள் எடைமிகுந்தப் பொருட்களை சுமக்க வேண்டாம்.

தாயாருக்கு நெஞ்சு வலி, உங்களுக்கும் கை, கால் வலி, அசதி வந்துப் போகும். அரசியல்வாதிகளே! உங்களின் கோரிக்கையை மேலிடத்தில் ஏற்பார்.

கன்னிப் பெண்களே!

பெற்றோருடன் கலந்தாலோசித்து வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள்.

பழைய வேலையாட்கள் மீண்டும் பணியில் வந்து சேர்வார்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். சக ஊழியர்கள் பாராட்டுவார்கள்.

கலைத்துறையினர்களே! வெளிநாட்டு நிறுவனங்களிலிருந்து வாய்ப்பு வரும். விட்டுக் கொடுத்துப் போவதால் வெற்றி பெறும் மாதமிது.

அதிஷ்ட திகதிகள்: 4, 15, 17, 24, 26
அதிஷ்ட எண்கள்: 4, 9
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், பிஸ்தா பச்சை
அதிஷ்ட கிழமைகள்: திங்கள், சனி

5, 14, 23 ஆகிய திகதிகளில் பிறந்த நீங்கள், இந்த மாதத்தில் விவாதங்கள், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள்.

அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை அறிவீர்கள். பழைய கடன் பிரச்னைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். சிலருக்கு வேற்றுமாநிலத்தில் வேலை அமையும்.

பழைய வீட்டை இடித்துக் கட்டத் தொடங்குவீர்கள். சகோதரங்களின் அரவணைப்பு அதிகரிக்கும். ஆனால் பேச்சில் கடுமை காட்டாதீர்கள்.

அரசு காரியங்கள் தாமதமாக முடியும். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். மாதத்தின் மையப்பகுதியிலிருந்து அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள்.

திடீர் பணவரவு உண்டு. உறவினர் வீட்டு விசேஷங்களில் கலந்துக் கொள்வீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். அரசியல்வாதிகளே! எந்த கோஷ்டியிலும் சேராமல் நடுநிலையாக இருக்கப்பாருங்கள்.

கன்னிப் பெண்களே! உங்களின் புதுத் திட்டங்களை பெற்றோர் ஆதரிப்பார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள்.

பங்குதாரர்கள், வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோத்தில் உங்களின் கடின உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என ஆதங்கப்படுவீர்கள்.

கலைத்துறையினர்களே! பொது நிகழ்ச்சிகளில் தலைமை தாங்கும் அளவிற்கு பிரபலமாவீர்கள். மாறுபட்ட பாதையில் சென்று முன்னேறும் மாதமிது.

அதிஷ்ட திகதிகள்: 5, 8, 15, 14, 24
அதிஷ்ட எண்கள்: 1, 7
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஆலிவ் பச்சை
அதிஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி

6, 15, 24 ஆகிய திகதிகளில் பிறந்த உங்களுக்கு….

இந்த மாதத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். ஒரு சொத்தை காப்பாற்ற மற்றொரு சொத்தை விற்க வேண்டி வரும்.

சகோதரிக்கு திருமணம் முடியும். சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதைக் கிடைக்கும். மனைவி குடும்ப வருமானத்தை உயர்த்த சில ஆலோசனைகள் வழங்குவார். மனைவிவழி உறவினர்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள்.

கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். கோவிலைப் புதுப்பிக்க உதவுவீர்கள். குடும்பத்தினருடன் சுற்றுலா பயணம் சென்று வருவீர்கள். ஹிந்தி, தெலுங்கு பேசுபவர்களால் திடீர் திருப்பம் உண்டா-கும். அவ்வப்போது முன்கோபம், காரியத் தாமதம், அலைச்சல் வந்துப் போகும்.

அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை விரைந்து செலுத்தப்பாருங்கள். வழக்கில் வழக்கறிஞரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பது நல்லது. அரசியல்வாதிகளே! உட்கட்சி பூசல் வெடிக்கும்.

கன்னிப் பெண்களே!

கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து புது முடிவு எடுப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரி மட்டத்தில் செல்வாக்கு கூடும்.

கலைத்துறையினர்களே!

மூத்த கலைஞர்களின் பாராட்டுதலைப் பெறுவீர்கள். கொஞ்சம் அலைந்தாலும் அதற்கான பலனை அடையும் மாதமிது.

அதிஷ்ட திகதிகள்: 4, 6, 8, 17, 26
அதிஷ்ட எண்கள்: 5, 6
அதிஷ்ட நிறங்கள்: கிரே, வெளிர் நீலம்
அதிஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்

7, 16, 25 ஆகிய திகதிகளில் பிறந்த உங்களுக்கு…..

இந்த மாதத்தில் போராட்டங்களும், தடைகளும் இருந்தாலும் ஓயமாட்டீர்கள்.பிரபலங்களின் உதவியுடன் சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். வீடு வாங்க, கட்ட வங்கிக் கடன் உதவி கிடைக்கும்.

பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். தள்ளிப் போன திருமணம் கூடி வரும். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். நண்பர்களுடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள்.

பூர்வீகச் சொத்திலிருந்த வில்லங்கம் பேச்சு வார்த்தை மூலம் சுமுகமாக முடியும். மாதத்தின் மையப்பகுதியிலிருந்து திடீர் பயணங்கள் அதிகரிக்கும். தூக்கம் குறையும்.

அரசாங்க அதிகாரிகளால் தொந்தரவுகள் வந்துப் போகும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். எதிர்காலம் பற்றிய கவலை அடி மனதில் நிழலாடும்.

யாரும் உங்களைப் புரிந்துக் கொள்ளவில்லை என அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். அரசியல்வாதிகளே! தொகுதி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யப்பாருங்கள்.

கன்னிப் பெண்களே!

பெற்றோரை அனுசரித்துப் போங்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த தோழியை சந்திப்பீர்கள்-. வியாபாரத்தில் புது முதலீடு செய்வது பற்றி யோசிப்பீர்கள்.

உத்யோகத்தில் சக ஊழியர்களால் ஒதுக்கப்பட்டாலும் அதிகாரிகளால் மதிக்கப்படுவீர்கள். கலைத்துறையினர்களே! சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள். ராஜ தந்திரயுக்திகளால் வெற்றி பெறும் மாதமிது.

அதிஷ்ட திகதிகள்: 7, 2, 6, 11, 25
அதிஷ்ட எண்கள்: 1, 7
அதிஷ்ட நிறங்கள்: ஊதா, பிங்க்
அதிஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி

8, 17, 26 ஆகிய திகதிகளில் பிறந்த நீங்கள்….

இந்த மாதத்தில் எதிலும் வெற்றி, லாபம் கிட்டும். சாணக்கியத்தனமாகப் பேசி சில காரியங்களை சாதிப்பீர்கள்.

பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். புதிய ஆடை, அணிகலன்கள் சேரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வெகுநாட்களாக போக நினைத்த குலதெய்வக் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள்.

அரசால் ஆதாயம் உண்டு. சிலருக்கு அயல்நாட்டில் வேலைக் கிடைக்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். திடீர் யோசனைகள் பிறக்கும். உறவினர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள்.

மாதத்தின் முற்பகுதியில் எதிலும் ஒருவித தயக்கம், சிலர் மீது நம்பிக்கையின்மை, எதிலும் ஆர்வமின்மை வந்துப் போகும். அரசியல்வாதிகளே! கட்சியின் மூத்த உறுப்பினர்களைச் சந்தித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

கன்னிப் பெண்களே!

பெற்றோருக்கு சில ஆலோசனைகள் வழங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் தங்களின் சொந்த விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். கலைத்துறையினர்களே! உங்களின் படைப்புத் திறன் வளரும். சமயோஜித புத்தியால் சாதிக்கும் மாதமிது.

அதிஷ்ட திகதிகள்: 8, 6, 23, 24, 26
அதிஷ்ட எண்கள்: 2, 5
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், க்ரீம் வெள்ளை
அதிஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்

9, 18, 27 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களுக்கு……

இந்த மாதம் உங்களின் நிர்வாகத்திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும்.நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும்.

மகளின் அலட்சியப் போக்கு மாறும். மகனுக்கு நீங்கள் எதிர்பார்த்ததைப் போல் நல்ல குடும்பத்திலிருந்து பெண் அமைவார்.

வழக்கில் திருப்பம் ஏற்படும். பூர்வீகச் சொத்தை புதுபிப்பீர்கள். உறவினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். சபைகளில் முதல் மரியாதை கிடைக்கும்.

பால்ய நண்பர்கள் உங்களை தேடி வந்துப் பேசுவார்கள். என்றாலும் சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். அரசியல்வாதிகளே! பினாமிகளின் நட்பால் சில விஷயங்களை சாதித்துக் காட்டுவீர்கள்.

கன்னிப் பெண்களே!

காதல் கைக்கூடும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் வெளிநாட்டு நிறுவனங்களின் தொடர்பு கிடைக்கும். வாடிக்கையாளர்களின் தேவையறிந்து கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும்.

நல்ல வாய்ப்புகளும் தேடி வரும். சக ஊழியர்களால் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். கலைத்துறையினர்களே! உங்களின் படைப்புகளை அரசு கௌரவிக்கும். வி.ஐ.பிகளால் இனம் கண்டறியப்படும் மாதமிது.

அதிஷ்ட திகதிகள்: 9, 10, 1, 3, 12
அதிஷ்ட எண்கள்: 4, 6
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், சில்வர் கிரே
அதிஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்