பினாமி சொத்துகள் மீது பாயும் மோடியின் அடுத்த அதிரடி!!

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை தொடர்ந்து, பினாமி சொத்துகள் மீது அடுத்ததாக நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

கோவா சென்றுள்ள பிரதமர் மோடி, அங்குள்ள க்ரீன்பீல்ட் விமான நிலையம் மற்றும் டியூம் எலக்ட்ரானிக் சிட்டி ஆகிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினர்.

அப்போது, கடந்த 8-ம் தேதி இரவை பற்றி சில விஷயங்களை பேச விரும்புவதாக குறிப்பிட்டார்.

தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் 10 மாதங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டது.

மக்கள் படும் கஷ்டம் எனக்கு புரிகிறது. ஏழ்மையில் நானும் இருந்துள்ளேன். மக்களின் பிரச்னைகள் எனக்கு புரியும் என்றார்.

எனது உயிருக்கு ஆபத்து உள்ளது, நான் எதற்கும் தயாராக உள்ளேன். என்னை தீயிட்டு கொளுத்தினாலும், இதனை நிறுத்த மாட்டேன் என்று ஆவேசமாக பேசினார்.

அதேபோல், ரூபாய் நோட்டுகளை தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கையாக பினாமி சொத்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மோடி அதிரடியாக அறிவித்தார்.