ஜீரண சக்தி தரும் சத்தான பூண்டு சட்னி

தேவையான பொருட்கள் :

பூண்டு பல் –  20
உளுந்து – 3 மேஜைக்கரண்டி
உப்பு  –  தேவையான அளவு
நல்லெண்ணெய் – 1 மேஜைக்கரண்டி
மிளகாய் வற்றல் – 2

செய்முறை :

* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுந்து மற்றும் மிளகாய் வற்றலை போட்டு வறுத்து ஆற வைக்கவும்.

* ஆறியவுடன் மிக்சியில் போட்டு அத்துடன் பூண்டு, உப்பு, சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து சட்னி பதத்திற்கு அரைக்கவும்.

* சுவையான சத்தான பூண்டு சட்னி ரெடி.

* தாளிக்க விரும்பினால் தாளித்து பரிமாறவும்.

* இந்த பூண்டு சட்னி ஜீரணத்திற்கு மிகவும் நல்லது.