நான்கு தொகுதிகளில் நடைபெற இருக்கும் தேர்தலில் அதிமுக வெற்றியை தனது வெற்றியாக கருத வேண்டும் என்று வாக்காளர்கள் மற்றும் அதிகமுக வினருக்கு ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள நெல்லிக்குப்பம் தொகுதிகளுக்கு வருகிற 19-ந்தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது.
இந்த தேர்தல் குறித்து அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் நான்கு தொகுதி தேர்தல்களிலும் அதிமுக-வின் வெற்றியை தனது வெற்றியாக கருத வேண்டும். வாக்காளர்கள் அன்பையும் பேராதரவையும் வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.