வீடமைப்புத்துறை அமைச்சராக இருந்த வேளையில் முறைகேடாக வாகனங்களை பயன்படுத்தியகுற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் அமைச்சரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமானவிமல் வீரவன்ச இன்று நிதிமோசடி பொலிஸ் பிரிவில் ஆஜராகியுள்ளார்.
ஏற்கனவே கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போதும்சுகவீனம் காரணமாக விசாரணையின் இடையில் வெளியேறியிருந்தார்.
இந்தநிலையில் இன்று அவர் மீண்டும் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை விமல் வீரவன்சவின் சகோதரர் சரத் வீரவன்சவும் வாகன முறைகேடு தொடர்பில்தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.