கத்தரிக்காய் சாப்பிட்டால் இப்படி ஒரு ஆபத்து ஏற்படுமா?

கத்திரிக்காய் சாப்பிடுபவர்களின், உடம்பின் தன்மையை பொருத்து, சிலருக்கு ஒத்துக் கொள்ளாமல், உடம்பில் அலர்ஜியை ஏற்படுத்தி பெரிய பாதிப்புகளாக மாற்றிவிடுகிறது.

கத்திரிக்காயில் அதிகப்படியான புரோட்டின், சோலனைன், ஹிஸ்டமின் இருப்பதே உடலில் அலர்ஜி ஏற்படுவதற்கு காரணம் ஆகும்.

கத்திரிக்காய் சாப்பிடுவதால் அதில் உள்ள சோலனைன் என்ற புரோட்டின் ஜீரண மண்டலம் மற்றும் நரம்பு மண்டலத்திற்கு எதிராக இடையூறு விளைவிக்கும்.

இதனால் அலர்ஜி, வாந்தி, மயக்கம், வயிற்று வலி, தலை சுற்றல் மற்றும் காய்ச்சல் போன்றவை ஏற்பட காரணமாக உள்ளது.

ஹிஸ்டமின் நமது உடலிலேயே சுரக்கப்படும் ஒரு புரோட்டின். எனவே ஹிஸ்டமின் அதிகம் உள்ள உடலிற்கு ஒவ்வாத கத்திரிக்காயை நாம் சாப்பிடும் போது, நம் உடம்பில் சரும அலர்ஜி, கொப்பளம் மற்றும் அரிப்பு போன்ற பாதிப்பை ஏற்படுத்தும்.