அனைத்து இலங்கையர்களும் இணைந்து நாட்டை கட்டியெழுப்பும் தேசிய பொது நிகழ்ச்சி நிரலே தற்போது நாட்டுக்கு அவசியம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற விங்க்ஸ் 2016 நிகழ்வில் இன்று(14) கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் கூறினார்.
மேலும் அவர், நாட்டின் எதிர்காலம் தொடர்பான நிகழ்ச்சி நிரலை ஒவ்வொருவரின் அதிகாரம் மற்றும் சுயத்தை அடிப்படையாக கொண்ட அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குள் கொண்டு செல்லக் கூடாது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் கலந்து கொண்டிருந்தார்.