சூர்யா 24 படத்தை தொடர்ந்து சிங்கம்-3 படத்தை களம் இறக்கவுள்ளார். இந்த படத்தின் டீசர் வேண்டுமானால் பெரும் திருப்தியை தரமால் இருக்கலாம்.
ஆனால், படம் கண்டிப்பாக ஹிட் மெட்டிரியல் தான் என கூறப்படுகின்றது. இவர் அடுத்து தானா சேர்ந்த கூட்டம் என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த படத்திற்காக சூர்யா கிட்டத்தட்ட 10 கிலோவை குறைத்துவிட்டாராம்.
சமீபத்தில் சூர்யாவை பார்த்த பலரும் ‘என்ன சூர்யா இப்படி ஆயிட்டீங்க’ என கேட்கிறார்களாம். 20 இளைஞராக இப்படத்தில் இவர் நடிப்பதாக தெரிகின்றது.