நள்ளிரவு முதல் தனியார் பேருந்துகள் ஓடாது

தனியார் பேருந்துகள் இன்று நள்ளிரவு 12 மணி முதல் சேவையில் ஈடுபடாது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று மதியம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும், வாகனங்களுக்கான குறைந்தபட்ச அபராத தொகை 2,500 ரூபாவாக உயர்த்தப்பட்டதை எதிர்த்தே இந்த சேவை புறக்கணிப்பு போராட்டம் நடாத்தப்படுகிறது.

தனியார் பஸ் சேவையினரால், இன்று நள்ளிரவு முதல் ஆரம்பிக்கவுள்ள குறித்த சேவை புறக்கணிப்பானது, கோரிக்கைக்கான தீர்வு கிடைக்கும் வரையில் தொடரும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.