நீதித்துறையில் பணியாற்றும் 70 நீதிபதிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக நேற்றைய தினம் நீதிச் சேவைகள் ஆணைக்குழு அறிவித்திருந்தது.
இந்த நிலையில், குறித்த 70 நீதிபதிகளில் மிக முக்கிய நீதிபதியான சண்டேலீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை வழக்கு தொடர்பில் விசாரணைகள் மேற்கொண்டு வரும் கல்கிஸ்ஸை நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம். சஹாப்டீன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த, இடமாற்றம் அடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதி அமுல்படுத்தப்படும் என நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் பிரதிச் செயலாளர் ஆர்.பி.டி.பி.பி.ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த இடமாற்றத்திற்கு எதிராக மேன்முறையீடு செய்ய இருப்பின் இந்த மாதம் 25ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் பிரதிச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.