நியூசிலாந்தில் இடம்பெற்ற பூகம்பத்தில் உயிர்தப்பிய மூன்று மாடுகள் சிறிய தீவில் சிக்கி உயிருக்கு போராடி வரும் சம்பவம் வீடியோவாக வெளியாகி உருக வைத்துள்ளது.
நியூசிலாந்தில் இடம்பெற்ற 7.8 சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் பயங்கர சேதங்கள் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், Kaikoura அருகே உள்ள பகுதியில் பூகம்பத்தில் உயிர்பிழைத்த 2 மாடுகள் மற்றும் ஒரு கன்றுக்குட்டி சிறிய தீவில் சிக்கி உயிருக்கு போராடி வருவது ஹெலிகாப்டர் வழியாக கண்டறியப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தின் போது மாடுகள் சுற்றியிருந்த புல்வெளி நிலங்கள் சுமார் 20 அடி ஆழம் சரிந்துள்ளது. மாடுகள் நின்றுக்கொண்டிருந்த இடம் மட்டும் சரியாமல் அப்படியே இருந்துள்ளது.
இதனால், மாடுகள் உயிர் பிழைத்திருந்தாலும் மூன்றும் அங்கிருந்து நகர முடியாமல் சிக்கி தவித்து வருகின்றது.
மாடுகள் கூட்டமாக இருந்ததா? மாட்டின் உரிமையாளர் யார் என்ற தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. எனினும், அதிகாரிகள் மூன்று உயிர்களையும் மீட்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.