சபர்ணாவை காதலித்து ஏமாற்றிய காதலன் இவர்தானா? திடுக்கிடும் தகவல்!

நடிகை சபர்ணாவை காதலித்து ஏமாற்றிய நபர் குறித்து பெற்றோர் மற்றும் நடிகையின் ஆண் நண்பர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி  வருகின்றனர். சென்னை மதுரவாயல் சீமாத்தம்மன் நகர், 1வது பிரதான சாலையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் நடிகை சபர்ணா உடல் அழுகிய நிலையில்  போலீசார் கண்டுபிடித்தனர். வளர்ந்து வரும் நடிகையான சபர்ணா சினிமாவில் வாய்ப்பு கேட்டு வடமாநிலத்திற்கும் சென்றுள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு  முன்பு சினிமா துறையை சேர்ந்த ஆண் நண்பருடன் வாய்ப்பு கேட்டு வடமாநிலங்களில் பல இடங்களுக்கு சுற்றி வந்துள்ளார். அப்போது சபர்ணாவுக்கும், அவருக்கும்  காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

டெல்லி, மும்பை உள்ளிட்ட இடங்களுக்கு சென்ற இருவரும் ஓரே ஓட்டலில் அறை எடுத்து தங்கி படப்படிப்பில் கலந்து கொண்டுள்ளார். இதனால் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டதாகவும், சபர்ணாவின் தோழிகள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். மேலும், இதுபோன்ற நடவடிக்கையை சபர்ணாவின் பெற்றோர் கடுமையாக கண்டித்தததால் தான் கடந்த ஓராண்டாக அவர் மதுரவாயலில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.

 மகளான சபர்ணாவின் நடவடிக்கையில் அதிர்ச்சி  அடைந்த பெற்றோரும் அவரிடம் எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ளாமல் இருந்து வந்தது தெரியவந்தது. இதற்கிடையே, சபர்ணா காதலித்ததாக கூறும் நபர்  திடீரென சபர்ணாவிடம் இருந்து விலக ஆரம்பித்ததாகவும், அதனால் கடந்த ஒரு மாதமாக சபர்ணா எந்தவித படப்படிப்புக்கும் செல்லாமல் அவர் வீட்டின்  அறையிலேயே முடங்கி இருந்ததாகவும் குடியிருப்பு வாசிகள் தெரிவித்தனர்.

வழக்கமாக, சபர்ணா காலை 10 மணிக்கே வெளியில் சென்றுவிட்டு இரவு 11 மணிக்கு மேல் தான் வீட்டிற்கு திரும்புவார் எனவும் அப்பகுதி வாசிகள் போலீசாரிடம் தெரிவித்தனர். இதற்கிடையே சபர்ணா காதலித்ததாக கூறப்படும் நபரிடம் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

 இதற்காக சபர்ணாவின் ஆண்  நண்பர்களிடம் விசாரணையை தொடங்கி உள்ளனர். அழுகிய நிலையில் சபர்ணா உடல் கைப்பற்றப்பட்டதால் பல்வேறு சந்தேகங்கள் ஏழுந்துள்ளது. மேலும், ஒருவர்  தற்கொலை செய்யும் போது நிர்வாண நிலையில் இருக்க வாய்ப்பு குறைவு. அதேநேரத்தில் சபர்ணா இடது கை மணிக்கட்டு அறுக்கப்பட்டுள்ளது.

வீட்டிலும் சந்தேகம்படும் படியான தடயங்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர். இதனால் சபர்ணா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் அதிகளவில் உள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் போலீசார் சபர்ணா கையை அறுத்து கொண்டு தற்கொலை தான் செய்து கொண்டதாக வழக்கை முடிக்க ஆர்வம் காட்டி வருவதாகவும் உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

காதலுக்காக பெற்றோரை பிரிந்து ஓராண்டாக தனியாக வசித்து வந்த சபர்ணா. தற்கொலை  செய்து கொள்ளும் அளவுக்கு பலவினமானவர் அல்ல என்றும் தெரிவித்துள்ளனர். எனவே சபர்ணாவின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே தற்கொலையா?  அல்லது கொலையா என தெரியவரும்.