நியூஸிலாந்தில் ஏற்பட்டுள்ள முதல் நிலநடுக்கத்தால் இரண்டு பேர் பலியாகிய சில மணி நேரங்களில், அந்நாட்டின் தெற்கு தீவு ஒன்றில் 6.1 என்ற அளவில் மற்றொரு பலமான நிலநடுக்கம் தாக்கியுள்ளது.
இந்த இரண்டாவது நிலநடுக்கத்தின் மையப்புள்ளி நியூஸிலாந்தில் உள்ள கிரைஸ்ட்சர்ச் நகரின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளதாக நிலநடுக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்று (ஞாயிற்றுக் கிழமை) நியூஸிலாந்தின் தெற்கு தீவில் உள்ள இதே பகுதியில், 7.8 என்ற அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கமும், அதனைத் தொடர்ந்து சுனாமியும் தாக்கியுள்ள நிலையில் இந்த இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அங்கு ராணுவ ஹெலிகாப்டர்கள் அனுப்பப்பட்டுள்ளன. நிலநடுக்கத்துக்கு பின்னர் ஏற்படும் மறு நிலவதிர்வுகள் தொடர்வதால் பெரும்பாலான பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன.
நொடிப்பொழுதில் நிலநடுக்கம் ஏற்படுவதையும், பாரிய கட்டிடம் இடிந்து விழும் காட்சி பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தவிக்கும் 3 மாடுகளின் காட்சியும் இதோ…