கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, கலெக்டராக ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தை மிஞ்சூர் கோபி இயக்கி வருகிறார் என்பதும் தெரிந்ததே.
இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் வெகுவிரைவில் வெளியாகும் என்று செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது நயன்தாராவின் பிறந்த நாளான நவம்பர் 17ஆம் தேதி நள்ளிரவு 12மணிக்கு டைட்டில் அறிவிக்கப்படும் என்றும் இந்த அறிவிப்பு நயன்தாராவுக்கு கொடுக்கும் பிறந்த நாள் கிப்ட் ஆக கருதப்படுவதாகவும் செய்தி வெளிவந்துள்ளது.
KJR ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் தண்ணீர் பிரச்சனை குறித்த கதையம்சம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.