முல்லைத்தீவு மல்லாவிப்பகுதியில் தனது வயலில் வேலை செய்து கொண்டிருந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான விவசாயி ஒருவர் நேற்று மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி பலியானதுடன் மற்றுமொரு விவசாயி காயமடைந்துள்ள நிலையில் மல்லாவி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலர் பிரிவின் கீழுள்ள மல்லாவிப்பகுதியில் தனது வயலில் வேலை செய்து கொண்டிருந்த திருநகர் மல்லாவியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான தம்பிமுத்து ஞானேஸ்வரன் (வயது- 62) என்ற விவசாயியே இவ்வாறு பலியாகியுள்ளார்.
இவரது சடலம் மல்லாவி வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மரணம் தொடர்பிலான விசாரணைகளை மல்லாவிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன் அவருடன் வயலில் வேலை செய்து கொண்டிருந்த மற்றுமொரு விவசாயியான வளநகர் மல்லாவியைச் சேர்ந்த செல்லையா வசந்தகுமார் (வயது 55) என்பவர் காயமடைந்த நிலையில் மல்லாவி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.