கடந்த ஜனவரி மாதம் நடிகை த்ரிஷாவுக்கும் தயாரிப்பாளர் தொழில் அதிபர் வருண் மணியனுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. அவ்வளவு தான், அதற்கு அப்புறம்…திருமணம் நின்றுபோனது.
நடிப்புக்கு தடை போட்டதால் திருமணம் நின்றது என்று த்ரிஷா தற்போது காரணத்தை சொல்லியுள்ளார்.
ஆனால், கோலிவுட்டில் எப்போதும் போல் தனுஷை இந்த விவகாரத்தில் இழுத்து வைத்து பேசுகிறார்கள். தனுஷே ஒரு கட்டத்துக்கு மேல் நம்ப ஆரம்பிக்கும் அளவுக்கு…அவர் தான் காரணம் என்று கோலிவுட் பாட்ஸிகள் பரப்புகின்றன.
தனுஷும், த்ரிஷாவும் நீண்ட கால நண்பர்கள்.தனுஷை நிச்சயதார்த்த பார்ட்டிக்கு அழைத்தாராம் த்ரிஷா. ஆனால் தனுஷை விழாவில் பார்த்த மாப்பிள்ளை த்ரிஷாவிடம் கடுப்பானாராம்.
‘என் நண்பர்களை எப்படி விட்டு தருவது ?” என்று இவர் கேட்க…அங்கு வந்த மாப்பிளை அப்பா ,’என்ன பிரச்சனை?” என்று கேட்க…”உங்க வேலை இது இல்லை” என்று த்ரிஷா கடுப்படிக்க…”எங்கப்பாவையே இப்படி பேசுறியா?ன்னு அங்க வெடிச்ச பிரச்சனை தான் …திருமணம் நின்னு போக காரணமாம்.