மஹிந்தவுக்கு அதிர்ச்சி கொடுத்த பெண்..!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மத வழிபாடு நிகழ்வொன்றில் கலந்து கொண்டார். இதன்போது பெண்ணொருவர் அவருக்கு அதிர்ச்சி கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அக்குரஸ்ஸ, அல்கிரிய, கஹவில்கொட விகாரையில் இடம்பெற்ற மத வழிப்பாட்டில் மஹிந்த கலந்து கொண்டார். இதன்போது அந்தப் பகுதியை சேர்ந்த மக்களும் பங்கேற்றிருந்தனர்.

குறித்த சந்தர்ப்பத்தில் அங்கிருந்த மக்களால் மஹிந்தவுக்கு விசேட வரவேற்பு ஒன்று வழங்கப்பட்டது. மத வழிபாட்டு நிகழ்வுகளை அடுத்து, அங்கிருந்த மக்களுடன் மஹிந்த ராஜபக்ச சந்திப்பில் ஈடுபட்டார்.

இதன்போது பெண் ஒருவர் கூச்சலிட்டு வெளியிட்ட கருத்து பலரின் அவதானத்தை பெற்றுள்ளது. மஹிந்தவை பார்த்து குறித்த பெண் திடீரென “வணக்கம் அரசரே, ஐயோ வாருங்களேன்” என பெரிய சத்தமாக கூச்சலிட்டுள்ளார்.