தமிழ் மாணவர்களுக்கு சிங்களமும் சிங்கள மாணவர்களுக்கு தமிழையும் கற்பிப்பதை கட்டாயமாக்கும் சட்டமூலத்தை மாகாண சபையில் கொண்டு வர எதிர்பார்த்துள்ளதாக, வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண சபையுடன் பேசி இது இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக, அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நல்லூர் ஹிந்து வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு கருத்து வௌியிட்டுள்ளார்.