யாழ்.மாநகரசபை சுகாதார ஊழியர்கள் மற்றும் குடும்பலநல உத்தியோகத்தர்கள் யாழ்.மாநகரசபை நுழைவாயிலை மறித்து நிர்வாக முடக்கல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நிரந்த நியமனம் வழங்குமாறு கோரி ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டமானது, இன்று(15) ஒன்பதாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன்போது, தமக்கான நிரந்தர நியமனம் வழங்கப்படும் வரை இந்த பணிப்புறக்கணிப்பு தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என யாழ்.மாநகரசபை சுகாதார ஊழியர்கள் சுட்டிக்காட்டியுள்ளதுடன், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தம்மை நேரில் சந்தித்து பேசவில்லை என குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை குறித்த இடத்திற்கு யாழ்.பொலிஸ் நிலைய பொலிஸார் வருகைதந்து நிர்வாக முடக்கல் போராட்டத்தை நிறுத்தும் படி கோரியதுடன் அமைதியான போராட்டத்திற்கு தாமும் ஆதரவு வழங்குவதாக கூயுள்ளனர்.
இருப்பினும் தொழிலாளர்கள் பொலிஸாரின் வேண்டுகோளை புறந்தள்ளி தொடர்ந்தும் நிர்வாக முடக்கல் போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்.
மேலும், யாழ்.மாநகர சபையில் பணியாற்றிவரும் குறித்த, 127 சுகாதார ஊழியர்களும் கடந்த ஏழாம் திகதி தொடக்கம் பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.