இயக்குனர் கணவர் விஜயை பிரிந்த அமலா பால், தான் மிக சந்தோசமாக இருப்பதை உலகிற்கு தெரிவிக்க வேண்டி அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி படங்களையும், ஹாலிடே சென்று ரிலாக்ஸ் செய்யும் படங்களையும் சகட்டு மேனிக்கு பதிவிட்டு வருகிறார்.
அதில் சமீபத்தில், மலேசியாவில் இருந்து ஒரு கவர்ச்சி செல்பியை பதிவிட்டார். அதை கண்டு அவரின் ரசிகர்கள் கொதித்து விட்டனர்.ஒரு சிலர் சூப்பர் என்றாலும், ஒரு சில ரசிகர்கள்…” மீண்டும் நீங்கள் நடிக்க வந்ததில் மகிழ்ச்சி அடைகிறோம். ஆனால், நீங்கள் என்றால் ஒரு அழகான பிம்பம் ஒன்றை எங்களுக்குள் வைத்துள்ளோம்.கவர்ச்சி படங்களை வெளியிட்டு அதை கெடுக்காதீர்கள்.” என்று கருத்து கூறி உள்ளனர்.