கடந்த வாரம் இடம்பெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்பிற்காக வாக்களித்தவர்களில் அதிகளவானோர் வெள்ளை இனத்தை சேர்த்த முதியவர்கள் என தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் பல பகுதிகளில் ட்ரம்பிற்கு எதிராக தற்போதும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. இந்த ஆர்ப்பாட்டங்களில் சில நகரங்களில் வன்முறையாக வெடித்துள்ளது.
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவாகியதன் மூலம் அமெரிக்க தேசியவாதம் தலைதூக்கியுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார்.
அமைச்சரின் கருத்து குறித்து அரசியல் ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
டொனால்ட் ட்ரம்பின் வெற்றி தேசியவாதத்தின் வெளிப்பாடாக பார்க்கவில்லை என அரசியல் கட்டுரையாளரும் சமூக ஊடக செயற்பாட்டாளருமான பிலிப் ஷாந்த தெரிவித்துள்ளார்.
எனினும் அரசியல் மோதலுக்கு உள்ளாகியுள்ள அமெரிக்க குடிமக்கள் ட்ரம்ப் தெரிவாகியுள்ளதன் ஊடாக தங்களுக்கு விரைவாக பதில் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். ட்ரம்பின் வெற்றி ஒரு போதும் ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் வர்த்தகத்தின் முடிவாக காணப்படாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒரு நாட்டின் பொதுவான விடயங்களுக்கமைய அரசியல் முனைவாக்கமடைந்து தலைவர்கள் உயர்வடைந்துள்ளனர். இதனை தேசியவாதமாக நாங்கள் பார்க்க முடியாது. இவ்வாறான தெரிவு தற்போதைய பிரச்சனைகளுக்கு பதிலாக அமையாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்பாராதவிதமாக தேர்தலில் வெற்றி பெற்ற போதிலும் நாட்டில் உள்ள சமூக அரசியல் பிரச்சினைகளுக்கு ட்ரம்பினால் பதில் தேடுவெதென்பது சவாலான ஒரு விடயமாகும்.
வெற்றியின் பின்னர் தனி தேசியத்தில் கிடைக்கின்ற மக்கள் ஆதரவில் பதில் தேடுவதே ட்ரம்ப்புக்கு உள்ள சவாலாகும் என பிலிப் ஷாந்த மேலும் குறிப்பிட்டுள்ளார்.