கடந்த 8ஆம் தேதி முதல் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பு வசதி படைத்தவர்கள் முதல் , கீழ்த்தட்டு மக்கள் வரை அனைவரையும் பாதித்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தின் தேவாஸ் பகுதியை சேர்ந்த கண்பார்வை தெரியாத பிச்சைக்கார முதியவர் ஒருவர் கிராமத்து தலைவரிடம் தான் வாழ்நாள் முழுதும் சம்பாதித்த தொகையை மாற்றித்தருமாறு கட்டுக்கட்டாக பணத்தை கொடுத்துள்ளார். அதில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் என மொத்தம் ஒரு லட்சம் ரூபாய் வரை இருந்துள்ளது.
அந்த பிச்சைக்கார முதியவர் தன்னுடைய மேலும் சில சேமிப்புகளை தனது நண்பர்களிடம் கொடுத்து வைத்திருந்திருக்கிறார். பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியாகவே, பயந்து போன இவரது நண்பர்கள் அந்த பணத்தை இவரிடமே திருப்பி கொடுத்துள்ளனர்.
இந்த பார்வையற்ற முதியவருக்கு வங்கியில் கணக்கு இல்லாததால், இந்த பிரச்சனைக்கு வங்கி அதிகாரிகளுடன் பேசி தீர்வு காண முடிவு செய்துள்ளனர்.