திருச்செந்தூரில் சூரனை வதம் செய்து தேவர்களை காத்து அருளினார் முருகப்பெருமான். இதற்கு பிரதிபலனாக, இந்திரன் தனது மகளான தெய்வானையை முருகப்பெருமானுக்கு திருமணம் செய்து வைத்தார்.
திருமணம் முடிந்ததும் தெய்வானையுடன் முருகப்பெருமான் திருத்தணியில் வந்து அமர்ந்ததாக கூறப்படுகிறது. தெய்வானைக்கு சீதனமாக ஐராவதம் யானை வழங்கப்பட்டதாக புராணம் கூறுகிறது.
எனவே திருத்தணியில் உள்ள முருகப்பெருமானின் வாகனமாக மயிலுக்கு பதிலாக யானை இருக்கிறது.