கருப்பு பண விவகாரத்தில் பிரபல இயக்குனர் அமீர் இந்திய பிரதமர் மோடியையும், ரஜினியையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொது சிவில் சட்ட எதிர்ப்பு மாநாட்டில் கலந்துக் கொண்டு இயக்குனர் அமீர் பேசியதாவது,
மோடி, அம்பானி போன்ற பணக்காரர்களின் ஆதரவோடு விளம்பரத்தின் மூலம் இந்திய பிரதமரானார்.
தற்போது, தன்னுடைய தோல்வியை ஒப்புக்கொள்ள வழியில்லாமல் தான் கருப்பு பணம் விவகாரத்தை கையில் எடுத்துள்ளார்.
ஒரே இரவில் 500, 1000 நோட்டுகள் செல்லாது என அறிவத்தார். இதனையடுத்து, பிரதமர் மோடியின் அறிவிப்பு புரட்சி என மாவீரன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறினார்.
இதுவரை எந்த விஷயத்திலும் குரல் கொடுக்காத ரஜினிகாந்த், தற்போது 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு வாய் திறக்க வேண்டிய அவசியம் என்ன?
மேலும் கபாலி திரைப்பட டிக்கெட் அரசு நிர்ணயித்த விலைக்கு தான் விற்பனையானதா? அப்படியெனில், ‘கபாலி’ திரைப்படத்தின் மொத்த வசூல் குறித்து ரஜினி கணக்கு காட்ட முடியுமா?
150 ரூபாய் டிக்கெட்டை 2000 ரூபாய்க்கு விற்று சம்பாதிக்கும் ரஜினி கருப்பு பணம் ஒழிப்புக்கு ஆதரவு தெரிவிப்பது அநியாயம் என இயக்குனர் அமீர் கூறியுள்ளார்.