யாழ்ப்பாணம்-இளவாலையில் பெரியவிளான் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் நேற்று(14) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
குறித்த பகுதியைச் சேர்ந்த 15 வயது மாணவியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
காதல் விவகாரம் காரணமாகவே குறித்த சிறுமி தற்கொலை செய்து கொண்டிருப்பார் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.