தற்போதைய நிலவரப்படி ஜனாதிபதிக்கு வெளிநாடுகளுக்கு செல்வதற்கு முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்பன் பில குற்றம் சுமத்தினார்.
வரவு செலவு திட்டம் தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,
நிதி அமைச்சர் முன்வைத்துள்ள வரவு செலவு திட்டமானது, நாட்டு மக்களை குழப்பத்தினை ஏற்படுத்தும் வகையிலேயே அமைந்துள்ளது. அனைத்து விடயங்களுக்கும் வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது, இது பொது மக்களுக்கு பாதிப்பே தவிர வரவேற்கத்தக்கது அல்ல.
அதே போன்று வெளிநாடுகளுக்கு செல்வதற்கும் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது, இதன் காரணமாக ஜனாதிபதிக்கும் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாத இக்கட்டான நிலை ஏற்பட்டு விட்டது அப்படி செல்ல வேண்டுமானால் அவரும் அதிக வரிகளை செலுத்த வேண்டியுள்ளது.
முறைகேடான வரவு செலவு திட்டத்தினை முன்வைத்து ஜனாதிபதியையும் இக்கட்டில் தள்ளி விட்டார் நரித் தந்திரமுடைய ரவி.
அதேபோன்று தனது இலாபத்திற்காக வரவு செலவு திட்டத்தினை முன்வைத்துள்ள நிதி அமைச்சர், ஜனாதிபதியையும், பிரதமரையும் மட்டுமே மையப்படுத்தி வரவு செலவு திட்டத்தினை அமைத்துள்ளார்.
எவ்வாறாயினும் இந்த வரவு செலவு திட்டமானது நடைமுறைக்கு சாத்தியம் இல்லை, அதனால் சிறிதளவாவது அறிவுபூர்வமாகவும், சாத்தியப்படும் வகையிலும் சபைக்கு கொண்டு வாருங்கள், எனவும் உதய கம்மன் பில கோரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.