நள்ளிரவில் நிகழ்ந்த தீவிபத்து: தாய் மற்றும் 5 குழந்தைகள் பலி

ரஷ்யா நாட்டில் குடியிருப்பு ஒன்றில் நள்ளிரவு நேரத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி தாய் மற்றும் அவருடைய 5 குழந்தைகள் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய ரஷ்யாவில் உள்ள Tver மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தான் இந்த தீவிபத்து நிகழ்ந்துள்ளது.

நேற்று நள்ளிரவு 12 மணியளவில் வீடு ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.

தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு சென்றபோது குடியிருப்பில் தீ கொளுந்துவிட்டு எரிந்துக்கொண்டு இருந்துள்ளது. மேலும், வீட்டிற்கு அலறல் சத்தமும் கேட்டுள்ளது.

வீரர்கள் தீவிரமாக போராடியும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. சுமார் 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது.

ஆனால், வீட்டிற்குள் சிக்கிய ஒரு பெண் குழந்தை, 4 ஆண் குழந்தைகள் மற்றும் இவர்களது 30 தாயார் என 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர்.

எனினும், வீட்டிற்கு அருகில் தீக்காயங்களுடன் கிடந்த நபர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவர் இக்குடும்பத்தின் தலைவரா என்பது தெரியவரவில்லை.

6 பேரை பலிவாங்கிய தீவிபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.