தமிழ்நாட்டில் விதவை பெண்ணிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட 4 பேரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கரூர் மாவட்டம் பெரியபுத்தூரை சேர்ந்தவர் சந்திரா(30), கணவனை இழந்து விதவையாக வாழ்ந்து வரும் இவர் கடையில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 12ம் திகதி இரவு தனது அண்ணனுக்கு சாப்பாடு கொடுத்து விட்டு சந்திரா மட்டும் தனியாக தன்னுடைய வீட்டுக்கு நடந்து வந்தார்.
அப்போது 4 பேர் தனியாக வந்த சந்திராவை சீண்ட ஆரம்பித்தனர். ஆபாசமாக பேசிய அவர்கள், சந்திராவின் ஆடைகளை அவிழ்த்து அராஜகம் செய்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து சந்திரா தோகைமலை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த பொலிசார் விசாரணை நடத்தியதில், அந்த 4 பேரும் அதே பகுதியை சேர்ந்த சிவக்குமார், மனோகரன், தங்கவேல் மற்றும் இராமசந்திரன் என தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து பொலிசார் அவர்களை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.