வங்கிகள் தமது வாடிக்கையாளர்கள் 24 மணித்தியாலமும் பணத்தை எடுத்துக்கொள்ளக்கூடிய வகையில் ஏடிஎம் எனப்படும் தன்னியக்க பணப்பரிமாற்ற இயந்திரத்தை அறிமுகம் செய்துள்ளமை தெரிந்ததே.
இந்த இயந்திரங்களில் அவ்வப்போது கோளாறுகள் ஏற்படுவதனால் வங்கிகளுக்கு அல்லது வாடிக்கையாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுவதுண்டு.
இதேபோன்று மலேசியாவில் இளைஞர் ஒருவர் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க முற்பட்டவேளை பணம் கத்தை கத்தையாக கொட்டியுள்ளது. இவ்வாறு கொட்டிய பணத்தின் மொத்த மதிப்பு 10,000 மலேசியன் ரிங்கிட் ஆகும். அதாவது 2267.88 அமெரிக்க டொலர்கள் என்றால் பாருங்களேன்.