1,000 ஆண்டுகளுக்கு பிறகு பூமியில் மனிதர்கள் வாழ முடியாது: பிரபல விஞ்ஞானி எச்சரிக்கை

பூமியில் இயற்கைக்கு எதிராக மாறிவரும் சுற்றுச்சூழலை தடுத்து நிறுத்தாவிட்டால் அடுத்த 1,000 ஆண்டுகளுக்கு பிறகு பூமியில் மனிதர்கள் வாழ முடியாத சூழல் ஏற்படும் என பிரபல விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாக்கின்ஸ் தெரிவித்துள்ளார்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் விண்வெளி ஆராய்ச்சி குறித்து நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஸ்டீபன் ஹாக்கின்ஸ் பங்கேற்றுள்ளார்.

அப்போது, ‘இயற்கைக்கு எதிரான காலநிலை மாற்றத்தால் நாம் வாழும் இந்த பூமியானவது பலவீனம் அடைந்து வருகிறது.

இதே நிலை தொடர்ந்து நீடித்தால், அடுத்த 1,000 ஆண்டுகளுக்கு பிறகு பூமியில் மனிதர்கள் வாழ முடியாத மோசமான சூழல் உருவாகும் ஆபத்து உள்ளது.

இதனை தடுப்பதற்கு தீவிரமான புவியியல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சிகளை தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டும் என ஸ்டீபன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் குடியேற இன்னும் 100 ஆண்டுகள் தேவைப்படும் என்பதால் அதற்கான முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஈடுப்பட்டு வருவதாக ஸ்டீபன் ஹாக்கின்ஸ் தெரிவித்துள்ளார்.