பிரதமரின் ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால் ஆங்காங்கே சோக சம்பவங்கள் நடந்து வரும் நிலையில் ஒருசில காமெடி சம்பவங்களும் நடந்து வருகின்றனர். கேரளாவில் ஒருசில நக்கல்காரர்கள் ஏ.டி.எம் மிஷின் ஒன்றுக்கு மலர் வளையம் வைத்து இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கேரள மாநிலத்தில் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள ஒரு வங்கியின் ஏ.டி.எம்-இல் எந்த நேரம் சென்றாலும் பணம் இல்லை என்று போர்டுதான் தொங்குகிறது. இதனால் கடுப்பான அந்த பகுதி மக்கள், அந்த ஏ.டி.எம் மிஷினுக்கு மலர் வளையம் வைத்து, விரைவில் இறுதிச்சடங்கு செய்யப்படும் என்று எழுதி வைத்துள்ளனர். இந்த மலர் வளையத்தையும், போர்டையும் அந்த பகுதியின் வழியாக செல்பவர்கள் பார்த்து நகைச்சுவையை ரசித்து வருகின்றனர்.