உலகில் வாழும் மிகவும் அறிவாளியாக கருதப்படும் பேராசிரியர் Stephen hawking, மனிதர்களின் எதிர்காலம் தொடர்பில் தீர்மானமிக்க ஆரூடம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக்கத்தில் விசேட உரையாற்றும் போதே பேராசிரியர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 1000 ஆண்டுகளுக்குள் மனித இனம் பூமியில் அழிந்து விடும். அதற்கான சூழல் தற்போது அதிகமாக ஏற்பட்டு வருவதாக பேராசிரியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதன் காரணமாக மனிதர்கள் வாழ்வதற்கு இன்னும் ஒரு கிரகத்தை கண்டுபிடிக்கும் நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது வரையில் 10 ஆயிரம் முறை பூமியை அழிக்கும் அணு ஆயுதங்கள் பல்வேறு நாடுகளில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளாக அவர் கூறியுள்ளார்.
அத்துடன் மனித இனத்தை அழிக்கும் ஆயுதங்கள் தற்போது உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
செயற்கை நுண்ணறிவுவை அதிகரிப்பது மனிதர்களின் அழிவை விரைவுபடுத்தும் என பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதற்கமை மனிதர்களை பூமிக்கு அப்பால் கொண்டு செல்வதற்காக ஆரம்பித்துள்ள பல வேலைத்திட்டங்கள் தற்போது வரையில் செயற்படுத்தப்படுகின்றன.
எதிர்வரும் 50 வருடங்களில் இது தீர்மானமிக்கதாக காணப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது செயற்படுத்துகின்ற திட்டங்களுக்கமைய எதிர்வரும் 50 வருடங்களில் வேற்றுகிரகவாசிகளின் தொடர்புகளை கட்டியெழுப்ப கூடிய சந்தர்ப்பம் கிடைக்கும் எனவும் பேராசரியர் மேலும் தெரிவித்துள்ளார்.