பிரித்தானியாவின் செயற்பாடு அமெரிக்காவை பாதித்துள்ளது! ஒபாமா

டொனால்ட் ட்ரம்பின் வெற்றி தனக்கு அதிர்ச்சி அளித்துள்ளதாக ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

தனது இறுதி வெளிநாட்டு விஜயத்தை மேற்கொண்டு கிரீஸ் சென்றுள்ள ஜனாதிபதி ஒபாமா இந்த தகவலை வெளியிட்டார்.

தேசியம் என்ற பெயரில் தீய ஒழுக்கம் முன்வந்துள்ளதனை காண முடிகின்றதென ஒபாமா அங்கு குறிப்பிட்டுள்ளார்

பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகிய பிரிடெக்ஸ் வாக்களிப்பு, அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல்களினுள் இதனை காண முடிந்ததென ஒபாமா கிரீஸில் வைத்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, பிரித்தானியாவை சுற்றி கட்டியெழுப்பப்படுகின்ற இனவாதத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு நாங்கள் செயற்பட வேண்டும் என ஒபாமா தெரிவித்துள்ளார்.

இனம் மற்றும் மத ரீதியாக பிளவுப்படும் வேதனைக்குரிய அனுபவத்தை அமெரிக்கா முகம்கொடுப்பதாக ஒபாமா இங்கு குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க மக்களின் பார்வையில் காணப்பட்ட அசைவுகள் டொனால்ட் ட்ரம்பின் வெற்றிக்கு காரணமாகியுள்ளதாக ஒபாமா கூறியுள்ளார். ட்ரம்பின் வெற்றி தன்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியதாக ஒபாமா மேலும் தெரிவித்துள்ளார்.