இலங்கை, ஜிம்பாப்வே, மேற்கிந்திய தீவுகள் ஆகிய 3 அணிகள் ஜிம்பாப்வேயில் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி இலங்கை வெற்றி பெற்றது.
இந்நிலையில் இன்று நடக்கும் போட்டியில் இலங்கை- மேற்கிந்திய தீவுகள் அணிகள் விளையாடி வருகின்றன.
இதில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணித்தலைவர் உபுல் தரங்கா முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தார்.
இதன்படி மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களமிறங்கி விளையாடி வருகிறது.