இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்காரா உலகின் தலைசிறந்த துடுப்பாட்ட வீரராக மட்டுமல்லாமல், சிறந்த விக்கெட் கீப்பராகவும் கலக்கியவர்.
அவர் தற்போது வங்கதேச பிரீமியர் லீக் போட்டியில் டாக்கா டைனமிட்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்நிலையில் நேற்று நடந்த கோமிலா விக்டோரியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சங்கக்காராவின் வியக்க வைக்கும் ஒரு ஸ்டெம்பிங் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.
அதிரடி காட்டிக் கொண்டிருந்த கோமிலா விக்டோரியன்ஸ் அணியின் அகமது ஷேஹாட்டை நொடியில் ஸ்டெம்பிக் செய்து 15 ஓட்டங்களில் வெளியேற்றினார் சங்கக்காரா.
இந்தப் போட்டியில் டாக்கா டைனமிட்ஸ் அணி 33 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கோமிலா விக்டோரியன்ஸ் அணியை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.