நடிகை ரேகா மோகன் தற்கொலை செய்து கொள்ளவில்லை, மாறாக மாரடைப்பால் தான் காலமானார் என்ற தகவல் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.
மலையாள படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் ரேகா மோகன்.
திருச்சூரில் தனியாக வசித்து வந்த ரேகா மோனன், நாற்காலியில் அமர்ந்தபடி சடலமாக மீட்கப்பட்டார்.
இவரது பக்கத்தில் கிளாஸ் ஒன்று இருந்தது, எனவே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் மாரடைப்பால் மரணமடைந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.
புற்றுநோயால் சில வருடங்கள் அவதிப்பட்டு வந்த ரேகா மோகனுக்கு குழந்தைகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.