வெயிலினால் கருத்து முகம் பொலிவில்லாமல் இருந்தால் அதனை உடனடியாக போக்குவதற்கு அற்புதமான நமது பாரம்பரிய சமையல் பொருட்களும் உண்டு.
சிவப்பழகு க்ரீம்கள் உங்கள் சரும செல்களை அழிக்கின்றன. இயற்கை எண்ணெயை தடுத்துவிடும். இதனால் மங்கு கருமை படர்ந்துவிடும். விரைவில் சுருக்கங்கள் தந்துவிடும்.
பால் மற்றும் தேன் :
தேவையானவை :
பால் – 1 டீஸ்பூன்
தேன் – 1 டீஸ்பூன்
இரண்டையும் ஒன்றாக கலந்து முகத்தில் தடவி கழுவினால் முகம் பிரகாசமாய் ஜொலிக்கும். உங்கலுக்கு எண்ணெய் சருமமாக இருந்தால் பாலிற்கு பதிலாக கெட்டியான மோரை எடுத்துக் கொள்ளுங்கள்.
முட்டை ,எலுமிச்சை :
முட்டையை நன்றாக அடித்துக் கொள்ளுங்கள். அதனுடன் சில துளி எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவ வேண்டும். இறுகியதும் கழுவுங்கள். கருமை காணாமல் போயிருக்கும்.
தக்காளி :
தக்காளி சிறந்த சாய்ஸாக இருக்கும். முகத்திற்கு உடனடியாக அட்டகாசமான நிறத்தை தரும். தக்காளியை பாதியாக துண்டாக்கி முகத்தில் தேய்த்து 10 நிமிடங்கள் கழித்து கழுவவும். வறண்ட சருமம் இருப்பவர்கள் தக்காளியை மசித்து அதனுடன் பால் கலந்து உபயோகிக்கலாம்.
இஞ்சி மற்றும் தேன் :
இஞ்சியை துருவி அதனுடன் தேன் கலந்து முகத்தில் தடவுங்கள். இது அருமையான பலனை தரும். எண்ணெய் சருமம் இருப்பவர்கள் அவசியம் இந்த குறிப்பை பயன்படுத்தலாம்.
எண்ணெய் மசாஜ் :
ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய், மற்றும் பாதாம் எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். இதில் வேப்பிலையை மசித்து போடவும். பிறகு இந்த எண்ணெயை லேசாக சூடு படுத்தி அதனை உடல் முழுவதும் தேய்த்து அரை மணி நேரம் கழித்து குளித்தால் நிறம் கூடுவதை காண்பீர்கள்.
யோகார்ட் மற்றும் கடலைமாவு :
2 ஸ்பூன் யோகார்டுடன் 1 ஸ்பூன் கடலை மாவு மற்றும் தேன் கலந்து முகத்தில் பேக் போடுங்கள். 15 நிமிடம் கழித்து கழுவினால் நிறம் அதிகரித்திருப்பதை உணர்வீர்கள்.
சீரக நீர் :
1 ஸ்பூன் சீரகத்தை ஒரு கப் நீரில் கொதிக்க வைத்து ஆறிய பின் வடிகட்டி அந்த முகத்தில் முகம் கழுவினால் மாசு மரு மறைந்து சருமம் பளிச்சிடும். நிறம் தரும்.
இளநீர் :
இள நீரும் உடனடியாக நிறம் தரும். அதிலுள்ள மினரல் லேசாக உப்புக்கரிக்கும் தன்மை கொண்டது. இது உங்கள் சருமத்தை ப்ளீச் செய்கிறது.