வலிகாமம் வடக்கு – காங்கேசன்துறை பகுதியில் அமைந்திருந்த குமாரகோவில் என்ற சைவஆலயம் அகற்றப்பட்டு ஆலயம் இருந்த இடத்துக்கு அருகாமையில் பௌத்த விகாரை அமைக்கப்பட்டுள்ளது.
பௌத்தர்களோ, படையினரோ வசிக்காத பகுதியில் சைவ ஆலய முற்றத்தில் பௌத்த விகாரை அமைக்க அவசியம் என்ன? என சந்தேகம் மக்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ளது.
வலிகாமம் வடக்கில் உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த காங்கேசன்துறை மத்தி கிராமம் கடந்த 2015ம் ஆண்டு காலப்பகுதியில் மீள்குடியேற்றத்திற்காக மக்களிடம்வழங்கப்பட்டிருந்தது.
மக்கள் மீள்குடியமர தங்கள் கிராமத்திற்குசென்றிருந்தபோது, குமாரகோவில் அமைந்திருந்த நிலத்தில் அரச மரம் ஒன்றின் கீழ் சிறிய புத்தர் சிலை வைக்கப்பட்டு படையினரால் வணங்கப்பட்டு படையினர் பாதுகாப்பு வலயத்தை பின் நகர்த்திய போது கைவிடப்பட்ட நிலையில் தற்சமயம் விகாரை அ மைக்கப்பட்டு ”கமுணு விகாரை” என்ற பெயர் சூடப்பட்டுள்ளது.
இங்கு விகாரைக்குள் குமாரகோவில் பிள்ளையார் சிலையும் வைக்கப்பட்டுள்ளது.
காங்கேசன்துறை பகுதி வரலாற்று சிறப்புமிக்க நகுலேஸ்வரம் மற்றும் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம் உள்ளிட்ட பல சிறப்பு மிக்க சைவ ஆலயங்களை கொண்ட புண்ணிய பூமியான இப்பகுதியில் பௌத்த விகாரை அமைத்தமை திட்டமிட்டது பௌத்த மயமாக்கமா என்று மக்கள் சந்தேகிக்கின்றனர்.
இந்த விடயம் தொடர்பாக தமிழ்அரசியல்வாதிகள் உடன் கவன ம் செலுத்த வேண்டும் என்று மக்கள் கோருகின்றனர்.