கந்தன் காலடியில் சிறார்களுக்கு நடக்கும் கொடுமைகள் – தட்டிக்கேட்போர் யாரும் இல்லையா?

கதிர்காமத்தில் சிறார்களை பயன்படுத்தி கந்தன் ஆலயம் மற்றும் அதனை சூழவுள்ள பிரதேசத்தில் பிச்சை எடுக்க வைக்கும் தொழில் நடந்து வருவதாக தெரிய வருகிறது.

சிறுவர்களின் உரிமைகள் பற்றி பேசுவோர் எவரும் இது சம்பந்தமாக தேடிப்பார்ப்பதில்லை என கதிர்காமம் அபினவாராமய விகாராதிபதி தெரிவித்துள்ளார்.

கதிர்காமத்திற்கு வரும் பக்தர்களின் அனுதாபத்தை பெற்றுக்கொள்வதற்கு பிச்சை எடுப்பதற்காக கைக்குழந்தைகளையும் பயன்படுத்துகின்றனர்.

அதேவேளை கதிர்காமத்தில் சுற்றித்திரியும் சிறார்கள், பக்தர்களுக்கு உதவிகளை செய்து பணம் சம்பாதிப்பதை காணக் கூடியதாக இருக்கின்றது.

வயதுக்கு வந்த சில சிறுமிகள் பெரும்பாலும் இரவு நேரங்களில் ஆலய பூமியில் இருப்பதால், அவர்கள் சில சந்தர்ப்பங்களில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படும் சம்பவங்களும் நடப்பதாக கூறப்படுகிறது.

அதிகரித்து வரும் இந்த நிலைமை குறித்து பொறுப்புக் கூறவேண்டியவர்களுக்கு பல சந்தர்ப்பங்களில் தெரியப்படுத்திய போதிலும் அதனால், எந்த பலனும் ஏற்படவில்லை எனவும் கூறப்படுகிறது.