தெலுங்கானா மாநிலம் சைதன்யபுரி கிரீன் ஹில்ஸ் காலனியை சேர்ந்தவர் சுதாகர் ரெட்டி (வயது60 ) வக்கீல் இவரது மகன் பாரத் குமார் ரெட்டி ( வயது 30). சுதாகர் ரெட்டி சூரியாபெட் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவரை தனது அலுவலகத்திற்கும் வீட்டிற்கும் வேலைக்கு வைத்து உள்ளார். கடந்த 6 மாதங்களாக சிறுமி அங்கு வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் சிறுமியை வக்கீலும் அவரது குடும்பத்தாரும் கொடுமைபடுத்துவதாக குழந்தை உரிமை ஆர்வலர்களுக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அவர்கள் போலீசார் உதவியுடன் சிறுமியை அங்கிருந்து மீட்டு உள்ளனர். தற்போது வக்கீலும் அவரது மகனும் தலைமறைவாகி விட்டனர்.
போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்து உள்ளன. தான் சுதார ரெட்டியால் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், மேலும் அவரது மகனும் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இது குறித்து அவர்கள் குடும்ப உறுப்பினர்களிடம் தெரிவித்த போது அவர்கள் அனைவரும் சேர்ந்து என்னை அடித்து உதைத்தனர் என விசாரணையில் கூறி உள்ளார்.
இது குறித்து குழந்தை உரிமை ஆர்வலர் கூறும் போது சந்தேக நபர்கள் குழந்தையை கட்டாயபடுத்தி கொத்தடிமையாக வைத்து உள்ளனர். மேலும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தும் உள்ளனர். மேலும் சிறுமி கர்ப்பமாக இருக்கலாம் எனவும் அவருக்கு தேவையான் சிகிச்சை அளிக்கவேண்டும் எனவும் கேட்டு கொண்டனர். போலீசார் சிறுமியை மீட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிவைத்து உள்ளனர்.