புதிய ஆயிரம் ரூபாய் விரைவில் வெளியீடு

புதிய 1000 ரூபாய் நோட்டுக்கள் விரைவில் வெளியிடப்படும் என நிதித்துறை செயலாளர் சக்திகாந்தா தாஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த 8ம் தேதி நள்ளிரவு முதல் 500, 1000 ரூபாய் நோட்டுக்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது. கருப்பு பணத்தை ஒழிப்பது மற்றும் தீவிரவாத குழுக்களுக்கு பொருளாதார உதவி செய்வதை தடுக்கும் நடவடிக்கையாக இப்போது பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களுக்கு பதிலாக புதிதாக 500, 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் வழங்கி வருகின்றன.

இதுதொடர்பாக நிதித்துறை செயலாளர் சக்திகாந்தாதாஸ் கூறுகையில், “ஒரு சில மாதங்களில் புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் 1000 ரூபாய் நோட்டுக்கள் வெளியிடப்படும். 100 மற்றும் 50 ரூபாய் கரன்சிகள் பரிமாற்றம் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களுக்கு பதிலாக புதிய 500, 2000 ரூபாய் நோட்டுக்கள் வழங்கப்பட்டு வருகிறது. முதல் முறையாக புதிய வண்ணத்தில் 2000 ரூபாய் நோட்டுக்கள் வெளியிடப்பட்டுள்ளது” என்றார்.