நாக்கின் நுனியை அந்த இடத்தில் வைத்து அழுத்துவதால்…!அப்பறம் பாருங்க மேஜிக்கை

தூக்கம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் அத்தியாவசியமான ஒன்றாகும்.

சிலர் படுக்கையில் படுத்தவுடனே தூங்கி விடுவார்கள், ஆனால் சிலருக்கு எவ்வளவு நேரமானாலும் தூக்கம் வராது.

இதற்கு உடல் பிரச்சனைகள், மன சோர்வு போன்ற பிரச்சனைகள் என ஏராளமான காரணங்கள் இருக்கலாம்.

சரி, எளிதாக படுத்த சில நிமிடங்களில் தூக்கத்தை வரவழைப்பதற்கு எளிமையான முறையை மருத்துவர் ஆண்ட்ரீவ் வீல் கண்டுபிடித்துள்ளார்.

இதற்கு முதலில் மூச்சு விட்டு கொண்டே நம் நாக்கின் நுனியை வைத்து வாயின் உச்சியை தொட வேண்டும்.

பின்னர் மனதில் நான்கு எண்ணும் வரை நம் மூக்கால் சுவாசிக்க வேண்டும். பின்னர் ஏழு எண்ணும் வரை மூச்சை பிடித்து நிறுத்த வேண்டும்.

அதன் பிறகு பிடித்து வைத்திருந்த மூச்சை எட்டு எண்ணும் வரை வாய் வழியாக வெளியில் விட வேண்டும்.

 

இதை போல தொடர்ந்து நான்கு முறை செய்ய வேண்டும்.

இதன் தொடர்ந்து இரண்டு மூன்று மாதங்கள் செய்தால் நம் உடலில் பல மாற்றங்கள் நிகழுமாம்.

அதாவது இதயதுடிப்பு சீராகும், தேவையில்லாத டென்ஷன்கள் குறையும், செரிமானமும் நன்றாக இருக்கும்.

இந்த பயிற்சிக்கு 4-7-8 மூச்சு பயிற்சி என மருத்துவர் ஆண்ட்ரீவ் பெயர் வைத்துள்ளார்.