ஆஸ்திரியாவில் தாயார் ஒருவர் விமானத்திற்கு தாமதமாவதாக கூறி பச்சிளம் குழந்தையை கழிவறையில் விட்டுச் சென்றதால் அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரியாவில் உள்ள வியன்னா விமான நிலையத்தில் தான் குறித்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. விமான நிலையத்தில் அமைந்துள்ள கழிவறை ஒன்றில் இருந்து நள்ளிரவு 2 மணி அளவில் குறித்த குழந்தையை துப்புரவாளர்கள் சிலர் மீட்டு நிர்வாகத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதனையடுத்து உடனடியாக அவசரப்பிரிவு சேவைக்கு அழைப்பு விடுத்து, விரைந்து வந்த மருத்துவ உதவிக்குழுவினர் பரிதாப நிலையில் மயக்க்முற்றுக் கிடந்த குழந்தையை மீட்டு மருத்துவமனை விரைந்துள்ளனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக குறித்த மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதனிடையே தமக்கு செல்ல வேண்டிய விமானத்திற்காக பதற்றமும் பரபரப்புடன் காத்திருந்த 27 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். விமான நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமெராவில் பதிவாகியிருந்த காட்சிகளின் அடிப்படையில் குழந்தையின் தாயார் இவர் என்று பொலிசார் உறுதி செய்ததாக கூறப்படுகிறது.
நைஜீரியா மாணவி என்று கூறப்பட்ட அவரை கைது செய்த பொலிசார், தொடர்ந்து குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த பெண்மணி தமது குழந்தையுடன் பெலாரஸ் தலைநகர் Minsk நகரில் நின்று வியன்னா வழியாக அமெரிக்கா செல்லவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.