திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் என்பது நம் முன்னோர்களின் கூற்று.
பொதுவாக காலையில் மட்டுமே நடைபெறும் திருமணமானது, இன்றைய காலத்தில் இரவிலும் நடத்தப்படுகின்றது.
மகிழ்ச்சியாக நடைபெறும் இந்த மாதிரியான திருமண விழாவில், திடீரென மழை பெய்தால், அது நல்ல சகுணமா அல்லது கெட்ட சகுணமா என்பது பற்றி பல குழப்பங்கள் அனைவரிடத்திலும் இருக்கும்.
- மழை பெய்வது ஒரு இயற்கை நிகழ்வாகும். அந்த மழையானது, வரண்ட நிலத்தில் உள்ள பயிர்களை உயிர்ப்பிக்கிறது. எனவே இந்த வகையி வைத்து பார்க்கும் போது, திருமண நாளன்று மழை பெய்வது அந்த மணமக்களின் அதிர்ஷ்டமாக கருதப்படுகிறது.
- மழையானது சில மரபுகளின் படி, ஆசீர்வாதம், தூய்மை, ஒற்றுமை மற்றும் வளமை ஆகியவற்றைக் குறிக்கிறது. எனவே மழையை இது போன்ற சில நேர்மறையான காரணமாக கருதப்படுகிறது. எனவே நமது வாழ்க்கையின் முக்கிய நாட்களில் மழை பெய்வதை நல்ல சகுனமாக கருதப்படுகிறது.
- மழை என்பது ஆசீர்வாதத்தை குறிக்கிறது. எனவே திருமண நாளன்று மழை பெய்தால் அந்த மணமக்கள் மழையினால் ஆசிர்வதிக்கப்பட்டார்கள் என்று நம்பிக்கை கொள்ளும் நேர்மறை சகுனமாக கருதப்படுகிறது.
- மழை பெய்து முடிந்ததும் ஒரு புதிய ஆரம்பத்திற்கான வழி கிடைத்து விட்டது என்று அர்த்தமாகும். எனவே திருமணம் நாளில் மழை பெய்வதால், திருமணம் முடிந்த புதிய தம்பதிகள், தங்களின் புதிய வாழ்க்கையில் தெளிவான மனநிலையுடன் இருப்பார்கள் என்று பொருள்படும்.
- திருமணம் என்பது குழந்தை செல்வத்தை கொடுக்கும் என்ற நம்பிக்கை. எனவே பல கலாச்சாரங்களின் படி திருமணத்தன்று மழை பெய்வது அவர்களுக்கு பல குழந்தைகள் பிறக்கும் என்ற வரத்தினை அளிப்பதாக கருதும் நல்ல சகுனமாகும்.
- திருமணம் நடைபெறும் போது, மழை பெய்தால், அந்த மணமக்கள் ஒற்றுமையாகவும், அவர்களின் எதிர்காலத்திற்கு தேவையான நிறைந்த செல்வத்தை பெற்று நல்ல வளமுடன் வாழ்க்கையை தொடங்குவார்கள் என்று கருதப்படுகிறது.