பெங்களூர் துவக்க எல்லையில் இருக்கிறது அந்த மிகப் பிரமாண்ட சாஃப்ட்வேர் கம்பெனி..! பெண்கள் மட்டுமே ஆயிரத்து ஐநூறு பேர் ஷிப்ட் அடிப்படையில் வேலை செய்கிறார்கள்.
அதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஆந்திரா, கேரளா மும்பை போன்ற இடங்களைச் சேர்ந்தவர்கள். பேயிங் கெஸ்ட் வீடுகள் வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர்.
அந்த கம்பெனியில் லிஃப்ட் ஆபரேட்டர் வேலை செய்பவன் டீனு எனும் பதினெட்டு வயது பையன். ஒரிஷாவைச் சேர்ந்தவன்.
அந்தக் கம்பெனி கொடுத்த ஒரு அறையில் அவன் தங்கி வேலை செய்து வந்தான். பார்ப்பதற்கு அழகான பையன். கொஞ்சம் ஆங்கிலமும் தெரியும்.
அன்று அவனுக்கு இரவு ஷிப்ட். மாலை எழு மணிக்கு டூட்டியில் சேர்ந்தான். அடுத்த நாள் காலையில் அவன் தனது அறைக்கு திரும்பவில்லை.
டீனுவுடன் வேலை செய்யம் நண்பர்கள் அவனைத் தேடி அலைந்தனர். எங்கும் இல்லை. ஏற்கனவே டீனு நண்பர்களிடம் லிஃப்ட் வேலை செய்யும் போது சில பெண்கள் தன்னைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பதையும், கன்னத்தைப் பிடித்துக் கொஞ்சுவது. கண்ட இடத்தில தொடுவதையும் கூறி வருத்தப் பட்டிருக்கிறான்.
அதில் இரண்டு பெண்கள் மும்பை லோக்கன் வாலா பகுதியைச் சேர்ந்தவர்கள். அவர்கள் மொட்டை மாடிக்கு வரச்சொல்லி கட்டாயப்படுத்தி இழுத்ததையும் கூறி இருக்கிறான்.
இதை மனதில் வைத்த நண்பர்கள் மொட்டை மாடிக்கு ஓடிப்போய் தேட தண்ணீர் டேங் அருகே டீனு உடம்பெங்கும் நகக் கீறல்கள் மற்றும் வாய்,மார்பில் காயம் பட்டு இறந்து கிடந்தான்.
நண்பர்கள் அலறியபடி கீழே ஓடி வந்தனர்…! விஷயம் நிர்வாகத்தின் காதுகளுக்குப் போனது. பெயரளவில் ஒரு விசாரணை போலீசுக்கு சில கவனிப்புகள்..!
விபத்தில் டீனு மரணம் என்று கூறி பொட்டலம் கட்டி டீனுவின் பாடியை ஒரிஷாவிற்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால், பாவம் அவனது நண்பர்கள். இப்போது புலம்பி கண்ணீர் வடித்து வருகின்றனர்..! சாரி இளைஞனே உனக்கு நீதி கிடைக்காது..?!