இந்தியாவில் டெல்லி மற்றும் வட மாநிலங்களின் சில பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை4.30 மணியளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
ஹரியானா மாநிலம் பவால் நகரின் தெற்கு பகுதியிலிருந்து 13 கி.மீ, தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டது.
பூமிக்கடியில் 10 கி.மீ, ஆழத்தில் இந்நிலநடுக்கம்ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகி உள்ளது.
இந்த நிலநடுக்கத்தால்உயிரிழப்பு எதுவும் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.