சீரற்ற காலநிலையால் 25 வீடுகள் சேதம்..!

திம்புலாகல – கந்தேகம பகுதியில் நேற்று(16) மாலை வீசிய கடும் காற்றினால் 25 வீடுகள் சேதமடைந்துள்ளன.

குறித்த பிரதேசத்தில் நிலவிய மழையுடன் கூடிய காலநிலையினால் ஏற்பட்ட கடும் காற்று காரணமாக இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை நேற்றயதினம் நிலவிய காலநிலையால் 25வீடுகள் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

மேலும் நாட்டில் பல பாகங்களில் கடும் மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.