கத்தோலிக்க திருச்சபை

கத்தோலிக்கம் அல்லது உரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church) மிகப்பெரிய கிறிஸ்தவ மதப்பிரிவாகும். 2004 ஆம் ஆண்டு கணக்கின் படி1,098,366,000 விசுவாசிகளை கொண்டதாக இப்பிரிவு இருக்கிறது. இவ்வடிப்படையில் கத்தோலிக்கமே உலகில் மிகப்பெரிய சமயபிரிவாகும்.

மற்றைய கிறிஸ்தவ மத பிரிவுகளைப்போலவே கத்தோலிக்கரும் இயேசுவை தங்களது கடவுளாக ஏற்றுக்கொள்கின்றார்கள். பாப்பரசர் கத்தோலிக்கரின் உலகத்தலைவராவார். கத்தோலிக்க தேவாலயத்தின் சுயவரைவிலக்கணத்தின் படி கத்தோலிக்க தேவாலயம் எனப்படுவது, இயேசுவின் தலைமைச்சீடரான இராயப்பரின் வழிவருபரின் தலைமையின் கீழ் ஏனைய ஆயர்களாலும் குருக்களாலும் வழிநடத்தப்படும் சமயமாகும். இங்கு இராயப்பரின் வழிவருபவராக பரிசுத்த பாப்பரசர் கொள்ளப்படுகிறார்.

தற்போது 16 ஆம் ஆசீவாதப்பர் பாப்பரசராக கத்தோலிக்க திருச்சபையை வழிநடத்துகிறார். இவர் 265 ஆவது புனித பாப்பரசராவார். இத்திருச்சபை ஒரு, புனித, கத்தோலிக்க,அப்போஸ்தலிக திருச்சபையை (திருச்சபையின் நான்கு அடையாளங்கள்) போதித்து வலியுறுத்துகிறது.

செபங்களும் கோட்பாடுகளும் :

சிலுவை அடையாளம் :

பிதா/சுதன்/பரிசுத்த ஆவியின் பெயராலே ஆமென்

மங்கள வார்த்தை செபம் :

அருள் நிறைந்த மரியே வாழ்க! கர்த்தர் உம்முடனே/ பெண்களுக்குள் ஆசிர்வதிக்க்கப்பட்டவள் நீரே/ உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசிர்வாதிக்கப்பட்டவரே.
அர்ச்சியஸ்ட மரியாவே/ சர்வேசுரனுடைய மாதவே, பாவிகளாயிருக்கிற எங்களுக்காக இப்போதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும். ஆமென்.

திருத்துவப்புகழ் :

பிதாவுக்கும் சுதனுக்க்கும் பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாவதாக./ ஆதியிலே இருந்தது போல/ இப்போதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

கத்தோலிக்க திருச்சபையின் ஒழுங்குவிதிகள் :

1. ஞாயிற்றுக்கிழமைகளிலும் கடன் திருநாட்களிலும் முழுப்பூசை காணல்
2. வருடத்திற்கு ஒருமுறையாவது, நல்ல பாவசங்கீர்த்தனம் செய்தல்
3. தவக்காலத்தில் பாவ சங்கீர்த்தனம் செய்து தேவநற்கருணை உட்கொள்ளல்
4. மாமிச தவிர்ப்பு நாட்கள், ஒருசந்தி நாட்களை கடைப்பிடித்தல்
5. சிறுவர் மற்றும் விகினஉறவுமுறைத் திருமணம் செய்யாமை
6. ஆட்சியாளருக்கு நல்லுதவி செய்தல்

மூவேளைசெபம் :

ஆண்டவருடைய தூதர் மரியாளுக்கு தூதுரைத்தார். தூய ஆவியால் அவள் கருத்தாங்கினாள். – அருள் நிறை… இதோ ஆண்டவரின் அடிமை. உமது சொற்படியே எனக்கு ஆகட்டும். – அருள் நிறை… வாக்கு மனிதனானார். நம்மிடையே குடிகொண்டார். – அருள் நிறை… கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதி பெறும்படி இறைவனின் தூய அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

செபிப்போமாக :

இறைவா/ உம் திருமகன் மனிதனானதை / உம்முடைய வானதூதை வழியாக அறிந்து இருக்கின்றோம். அவருடைய பாடுகளினாலும் மரணத்தினாலும் நாங்கள் உயிர்ப்ப்பின் மகிமை பெற உமது அருளைப் பொழிவீராக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.- ஆமென்.

சுருக்கமான மனத்துயர் செபம் :

என் இறைவனாகிய தந்தையே! நீர் நன்மை நிறைந்தவர். எனவே எல்லாவற்றிற்கும் மேலாக / உம்மை நான் அன்பு செய்கின்றேன். என் பாவங்களால் உமது அன்பை மறந்ததற்காக/ மனம் வருந்துகிறேன். உமது அருளுதவியால் இனிமேல் பாவம் செய்வதில்லை என்று உறுதிகூறுகிறேன். –

விசுவாச முயற்சி :

என் இறைவா, உமது திருச்சபை விசுவசித்துப் படிப்பிக்க உண்மைகளை எல்லாம் / நீரே அறிவித்திருப்பதால், அவைகளை எல்லாம் / நான் உறுதியாக ஏற்றுக்கொள்கிறேன்.

நம்பிக்கை முயற்சி :

என் இறைவா/ நீர் தந்த வாக்குறுதிகளை / நான் ஏற்றுக் கொள்கிறேன். எங்கள் ஆண்டவர் இயேசுவைன் இரத்தத்தால் என் பாவங்களைப் பொறுத்து எனக்கு உமதி அருளையும் வானக வாழ்வையும் அளிப்பீர் என்று உறுதியாக நம்புகிறேன். ஆமென்.

அன்பு முயற்சி :

என் இறைவா! நீர் அளவில்லாத அன்புக்கு உரியவர் என்பதால் அனைத்திற்கும் மேலாக, உம்மை நான் முழுமனதோடு அன்பு செய்கின்றேன்.அவ்வாறே என்னை நான் நேசிப்பது போல் எல்லோரையும் நேசிக்கிறேன்.

தேவதாயை நோக்கி புனித பெர்நார்துவின் செபம் :

இரக்கம் மிகுந்த தாயே/ உன் அடைக்கலம் நாடி உதவியைத் தேடி தமக்காய் பரிந்து பேச மன்றாடி வந்த எவரும் ஏமாந்தார் என உலகில் என்றுமே கேட்டதில்லை. அம்மா இதனை நினைத்தருள்வாயே. கன்னியருள் உயர் கன்னியே/ தாயே / இப்பெரும் நம்பிக்கையால் உந்தப்பட்ட நான் உன்னிடம் ஓடிவருகிறேன். பாவி நான். உன் தாள் விழுகிறேன். வார்த்தையின் தாயே/ தள்ளிவிடாதே/ என் மன்றாடைத் தயவாய் கேட்டருளும்.

கிறித்து கற்பித்த செபம் :

கிறிஸ்து கற்பித்த செபம்(பரலோக மந்திரம்) இயேசுவின் சீடர் எப்படி செபிப்பது என கேட்டபோது இயேசு சொல்லிக்கொடுத்த செபமாகும்.விவிலியத்தில் மத்தேயு 6:9-13 ஆம் வசனங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. எல்லா கிறிஸ்த்தவரும் இச்செபத்தை உச்சரிக்கைன்றபோதும் , கத்தோலிக்கர் அதிகமாக பாவித்துவருகின்றனர்.

இச்செபத்தின் வசன நடை இடத்துகிடம் வேறுபட்டாலும் பொருள் மாற்றமில்லை. கைகளை விரித்து வான்நோக்கி உயர்த்தியபடியோ,குழுவாக உச்சரிக்கும் போது அருகிலுள்ளவரின் கையை பிடித்து ஒருமனித சங்கிலி அமைத்த்வாறோ சொல்வது வழக்க்கமாகும். அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டவை மூல விவிலியத்தில் காணப்படாவில்லை,பின்னர் இணைக்கப்பட்டுள்ளது.

விண்ணிருக்கும் எம் தந்தாய்!
ஒளிரட்டும் நின் திருப்பெயரே!
வருகவே உம் ஆட்சியே!
விண்ணைப்போல மண்ணிலே!
அளிப்பீரே எமக்கு உணவு இன்று!
மன்னிப்பீரே எம் குற்றம்தனை!
யாமும் பிறரை மன்னித்தவாறே!
தூண்டற்கவே எம்மை தீவழியிலே!
கடையேற்றுகவே எம்மை
தீயனிடமிருந்து நீர்.

(“ஆட்சியும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமக்கே. ஆமென்.”)