இந்த பச்சிளம் குழந்தைகள் செய்த ஒரே தவறு..இந்தியாவில் பிறந்தது..அதிலும் தலித்துகளாகப் பிறந்தது…!
அவர்கள் ஊரில் உயர் சாதியினர் வாழும் பகுதி தனியாகவும், தலித்துகள் வாழ ஊருக்கு வெளியே காலனியும் இருக்கிறது..! எந்த காரணத்தைக் கொண்டும் அவர்கள் ஊருக்குள் வரக்கூடாது.
ஆடு மாடுகள் இறந்து விட்டால் செருப்பு மேல் சட்டை இல்லாமல் தலை குனிந்து கை கட்டியபடி வந்து தரையில் மண்டியிட்டு அமர வேண்டும்
செத்துப் போன விலங்குகளை எடுத்துப் போய் விட வேண்டும்..! அன்று நான்கு மாடுகள் நோய் வந்து இறந்து விட தலித் மக்கள் வழக்கம் போல வந்து மண்டியிட்டு அமர்ந்திருந்தனர்..
ஊர் தலைவன் உத்தரவு கொடுக்க அந்த மாடுகளை வண்டிகளில் ஏற்ற.. அத்தலைவன் வீட்டில் ஒரு அழகான நாயக் குட்டி.வெளியே ஓடி வந்தது.
ஒரு பதிமூன்று வயது தலித் சிறுவன் ஆர்வ மிகுதியில் நாய்குட்டி என்று கூறி விட்டான்.
முடிந்தது கதை..! ——-பய என்க ஆளுக நாயை நாயினு சொல்றியா..என்று. அந்த சிறுவன்…குழந்தைகள்..அப்பா அம்மா அனைவரையும் ஊர் போது மந்தையில் கட்டி வைத்து ஒரு நாள் முழுவதும் அடித்தார்கள்..
அதன் பின் குடும்பத்தை விரட்டி விட்டு பள்ளிக்கூடத்தில் அந்த சிறுவனை விலங்கு மாட்டி சங்கிலியால் பிணைத்து சிறை வைத்து விட்டனர்..
ஒரு வாரம் கொலை பட்டினி… சிறுவன் மயங்கி விழ.. தூக்கி கொண்டுபோய் காலனி வெளியே வீசி விட்டு வந்து விட்டனர்..!
நாம் எந்த காலத்தில் வாழ்கிறோம் நண்பர்களே..!?